தேநீரைத் தேற்றுதல்

 







பத்து பதினைந்து கிளாஸ்கள் 
வரிசையில் வீற்றிருக்க
அத்தனையும் 
சீராக நிரம்பும்படி
கைவரிசைக் காட்டி 
தேநீர் தயாரிக்கும்
அண்ணன் ஒருவரை
பத்து பதினைந்து 
ஆண்டுகளுக்குப் பிறகு
சமீபமாய் சந்திக்க வாய்த்தது
அவரது தேநீர் தயாரிக்கும் லாவகத்தில்
தடுமாறல் தெரியவே
காரணம் வினவினேன்
சிலருக்கு சர்க்கரை தூக்கலா..
சிலருக்கு கம்மியா..
சிலருக்கு அறவே இல்லாது..
ஒருசிலருக்கு மீடியமா..
ஒரு வைத்தியரின் நிதானத்தோடு
விசாரித்து
தேநீர் தயாரிப்பதாய்
நொந்துகொண்ட அவரை தேற்றுவதற்குள்
ஆறிப்போயிருந்தது
கேட்டு வாங்கிய 
வழக்கமான தேநீர்






                                   சாமி கிரிஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை